Subscribe Us

header ads

6 வயது மகளுக்கு இன்னும் தாய்ப்பாலூட்டும் 52 வயது தாய்: பந்தம் வலுப்பெறும் என்கிறார்..



ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள பைரான் பே நகரை சேர்ந்த மாஹா அல் முஸா என்ற 52 வயது பெண் தனது ஆறு வயது பெண்ணுக்கு இன்னும் தாய்ப்பால் ஊட்டிக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளிக்கு செல்லும் வயதில் உள்ள தனது மகள் ஆமினா விரும்பும் போதெல்லாம் அது சாலை, பூங்கா போன்ற பொது இடமாக இருந்தாலும், தயங்காமல் தனது அன்பு மகளுக்கு பாலூட்ட தயாராகி விடுகிறார், மாஹா அல் முஸா. ஆமினாவுக்கு எட்டு வயது ஆகும்வரை தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தப்போவதில்லை என்று கூறும் இவர், இதன்மூலம் மகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, தாய்-மகள் இடையிலான உறவின் பந்தமும் வலுப்பெறும் என்று தீர்மானமாக கூறுகிறார்.

ஆமினாவுக்கு பாலூட்டும் ஆபாசம் கலவாத புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவரும் இவரது தாய்மை உணர்வைப் புகழ்ந்து ஏராளமான வாழ்த்து கருத்துகளும் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments