5000 ரூபா நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும் இதனை கண்டிப்பதாகவும் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
26 ஆண்டுகளின் பின்னர் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட ஐயாயிரம் ரூபா நாணயத்தாளில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சிங்களத்திலும், மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆங்கிலத்திலும் கையொப்பமிட்டிருந்தனர்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னதாக நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அது அரசியல் ரீதியான ஓர் திருப்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வெள்ளைவான் கலாச்சாரம் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய போதிலும், ரணிலின் காரணத்தில் அரச அனுசரணையுடன் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


0 Comments