மதுரங்குளி ஸ்ரீமாவோபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
சின்னப்பாடு, கட்டைக்காடு, கொத்தாந்தீவு, பள்ளிவாசல்பாடு,
பெருக்குவட்டவான் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும்
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்
கூறினார்.
பலத்த மழையால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 16 வான் கதவுகளும், இராஜாங்கனை
நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஒயாவின் ஒரு வான் கதவும்
திறக்கப்பட்டுள்ளன.
இதனால் புத்தளம் மன்னார் பிரதான வீதியூடான வாகனப் போக்குவரத்து ஒழுவான்குளம் கங்கேவாடி பகுதியில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
இன்னும் அநேகமான பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
-நிப்ரான்-


0 Comments