Subscribe Us

header ads

பெண்ணை திருமணம் செய்த, பெண் கைது - 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்


ஆணாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டு மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்து 8 வருடங்கள் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான இந்த பெண்ணின் உண்மையான பெயர் குசும் தசாநாயக்க எனவும் அவர் கசுன் தசநாயக்க என்று தனது பெயரை மாற்றி கொண்டு வெலிகம, உடுகாவ என்ற பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து கொண்ட பெண், தன்னை மணந்து கொண்டவர் தன்னை உபசரிப்பதில்லை என காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஆணாக தன்னை வெளிக்காட்டிக்கொண்ட பெண்ணை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக மோசடியான ஆவணங்களை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண் மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments