ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது வைப்பிலிருக்கும் தொகையில் 30 வீதத்தினை 55 வயதுக்கு முன்பாக மீளப் பெற்றுக் கொள்ளக்கூடிய திட்டம் ஒன்றை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.
தொழில் அமைச்சின் செயலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் தமது வைப்பிலுள்ள தொகையில் 30 வீதமான தொகையினை 55 வயதுக்கு முன்பாக மீளப்பொறும் திட்டமொன்றினை தொழில் அமைச்சு (இன்று) முதல் அறிமுப்படுத்தியுள்ளது.
இதன் முலம் அதிகபட்சமாக 2 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ள முடியும்.அத்துடன் முன்பு போல் இல்லாது 25 வயது முதலே தமது வைப்பிலுள்ள பணம்இவேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்துக் கொள்ள முடி யும்.
இத்திட்டத்திற்கு உள்வாங்கப்படுபவர்கள் 10 வருடங்களுக்கு குறையாது ஊழியர் சேமலாப நிதியினை செலுத்தியிருக்க வேண்டும், தற்போது சேவையில் இருத்தல் வேண்டும்இதனிப்பட்ட கணக்கில் 3 இலட்சம் ரூபா வைப்பிலிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சின் அலுவலகங்கள் முன்பாக புதிதாக பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தின் உதவியுடன் தமது வைப்பு தொடர்பிலான விபரங்களை அறிந்து கொள்ள கூடியவாறு சேவைகள் இன்னும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
வீடமைப்பு திட்டத்திற்காக பணம் பெறுபவர்கள் அவர்களது பெயரில் எழுதப்பட்டுள்ள காணி உறுதிஇபிரேதேச சபை அல்லது உள்ளூராட்சி சபையின் அங்கீகாரம் பெற்று அமைக்கப்படவுள்ள வீட்டிற்கான வரைபடம்,வீடு கட்டுவதற்கான இடத்தின் சொத்தாண்மையை உறுதிப்படுத்த பிரசித்த நொத்தாரிசு ஒருவரின் கையொப்பம், வீடு கட்டுவதற்கான இடம் அவருக்கு சொந்தமில்லாவிடின் வீட்டுக் காணியை விற்பனை செய்பவரின் சம்மதம் தெரிவிக்கும் கடிதம் மற்றும் அவரது மரவு வழி அறிக்கையின் பிரதி , உரித்து அறிக்கையின் பிரதி என்பன நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மாறாக வைத்திய தேவைக்காக பணம் பெறுபவர்கள் அரச அல்லது தனியார் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஒருவரால் அல்லது வைத்திய அதிகாரியால் சான்றிதழ் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பணம் பெறுபவரின் மனைவி, பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வைத்திய சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்றார்.


0 Comments