அமெரிக்க அதிபர் ஒபாமா @potus என்ற புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் அவரை 10 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். இதன் மூலம் அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மிக குறைந்த நேரத்தில் 10 லட்சம் பேரால் பின்தொடரப்பட்டு ஒபாமா சாதனை படைத்துள்ளதாக கின்னஸ் விருது வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் 23 மணி நேரம் 22 நிமிடத்தில் ராபர்ட் டவ்னி ஜூனியர் என்பவரின் டுவிட்டர் கணக்கை 10 லட்சம் பேர் தொடர்ந்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனை ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ராபர்ட்டின் சாதனையை ஒபாமா முறியடித்துள்ளார்.
ஏற்கனவே ஒபாமாவுக்கு @barackobama என்ற டுவிட்டர் கணக்கு உள்ள நிலையில், அந்த கணக்கை அவருக்காக தேர்தல் வேலை செய்த குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். தற்போது தனக்கான பிரத்யேக டுவிட்டர் கணக்கை ஒபாமா துவக்கியுள்ளார். இந்த டுவிட்டர் கணக்கிற்கான சுயவிவரத்தில் தந்தை, கணவர் மற்றும் 44வது அமெரிக்க அதிபர் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி ஒபாமாவை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 Comments