2002ம் ஆண்டு இடம்பெற்ற வாகன
விபத்தொன்றில் சல்மான் கான் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ளது மும்பை
நீதிமன்றம குறித்த வருடம் செப்டம்பர் மாதம் சல்மான் கானின் வாகனம் மோதி
நூருல்லா கான் என்பவர் உயிரிழந்தும் மேலும் நால்வர் காயமுற்றதுமான சம்பவம்
தொடர்பிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அச்சந்தர்ப்பத்தில் வாகனத்தைத் தான்
செலுத்தவில்லையென சல்மான் கான் தெரிவித்து வந்த நிலையிலேயே இன்று அவருக்கு
எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த சந்தர்ப்பத்தில் அவரே
வாகனத்தை செலுத்தியதாகவும் அவர் மது போதையில் இருந்ததாகவும் நீதிபதி
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின்
போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரக்
காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமைக்கு எதிராக மும்பை வாழ் தமிழ்
மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தி அவருக்குத் தமது எதிர்ப்பை
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


0 Comments