நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்பட்டதை
அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் சபைக்கு நடுவில் வந்து
குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், நாடாளுமன்றத்திற்குள்
அமளியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்சம்,
ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமை தொடர்பில் மகிந்த
ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், சபைக்கு நடுவில் அமர்ந்து இன்றே
தமக்கு ஒரு தீர்வு வேண்டும் என கூறி கோஷமிட்டு வருவதாக நாடாளுமன்ற
செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஆணைக்குழு தனது கடமைக்காக
அழைத்துள்ளதாகவும் அதில் பிரச்சினைகள் இருந்தால், முன்னாள் ஜனாதிபதியின்
சட்டத்தரணிகளுக்கு அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய
முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அமளி முடிவுக்கு வந்தது.







0 Comments