ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, இம்மாதம் இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பாகிஸ்தானுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(05) விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 Comments