Subscribe Us

header ads

பார்வை பாதிப்பு வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்


அந்தக் காட்சி ஒரு புறத்தில் ஆச்­ச­ரியம் தரு­வ­தாக இருந்­தாலும் மறு­பு­றத்தில் ஏற்­க­னவே தெரிந்த விட­யத்தை உறைக்­கும்­படி மீள சொல்­வது போலவும் அமைந்­தி­ருந்­தது.
இரு கைபி­டிக்­க­ளுக்கும் இடையில் அகப்­பட்டு பிதுங்கி சளிந்து விழு­மாப்­போல அவ­ரது உடல் நாற்­கா­லியில் திணிக்­கப்­பட்­டி­ருந்­தது. இது ஆச்­ச­ரிய­மல்ல. இலங்­கை­யிலும் தமி­ழ­கத்­திலும் உள்ள இலக்­கி­ய­வா­தி­களும் கல்­வி­மான்­க­ளு­மான அவ­ரது அபி­மா­னி­க­ளுக்கு, அவ­ரது அதீத எடை எப்­பொ­ழு­துமே கண்­களை உறுத்­திக்­கொண்டே இருந்­தி­ருந்­தது.
அரு­கே­யுள்ள நாற்­கா­லியில் இருந்­த­படி இளம் பெண்­ணொ­ருத்தி ஒரு புத்­த­கத்தை வாய்­விட்டுப் படித்துக் கொண்­டி­ருந்தாள். இவர் ஊன்றிக் கவ­னித்­துக் கொண்­டி­ருந்தார். இதுவே ஆச்­ச­ரியம் அளிப்­ப­தாக இருந்­தது.
அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்த பார்வைக் குறை­பா­டு­ பற்றி ஏற்­க­னவே அரசல் புர­ச­லாகக் கேள்­விப்­பட்­டி­ருந்­த­போதும் இந்­த­ளவு மோச­மாக இருக்கும் என எண்­ணி­யி­ருக்­க­வில்லை. படித்தும் எழு­தியும் இன்னும் எவ்­வ­ளவோ தமிழ்ச் சமூ­கத்­திற்குச் செய்ய வேண்­டிய பெருங் கல்­வி­மானின் நிலை கவலையளித்­தது.
வய­தா­கும்­போது பார்வைக் குறை­பா­டுகள்
வய­தா­கும்­போது பெரும்­பா­லா­னோ­ருக்கு ஏற்­படும் பார்வைக் குறை­பா­டு­க­ளுக்கு பல்­வேறு நோய்கள் கார­ண­மாக உள்­ளன. கற்­றரக்ட் எனப்­படும் கண்­புரை நோய் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் பூர­ண­மாகக் குணப்­ப­டுத்தக் கூடி­ய­தாகும்.
கண்ணில் பிரஷர் எனப்­படும் குளுக்­கோமா, நீரி­ழி­வினால் ஏற்­படும் விழித்­திரைப் பாதிப்பு மற்றும் வயது சார்ந்த மக்­கி­யூலா சிதைவு நோய் ஆகி­யன அவ்­வா­றல்ல. அவற்றை முற்று முழு­தாகக் குண­மாக்­கு­வது சாத்­தி­மல்ல. ஆனாலும் ஆரம்ப கட்­டத்தில் கண்டு பிடிப்­ப­தாலும் தொடர்ச்­சி­யான சிகிச்­சை­க­ளாலும் ஓர­ளவு குண­மாக்­கு­வ­துடன், நோய் மேலும் மோச­ம­டை­யாமல் தடுக்­கவும் முடியும்.
வயது சார்ந்த மக்­கி­யூலா சிதைவு
மக்­கி­யூலா என்­பது எமது கண்ணில் உள்ள ஒரு சின்­னஞ்­சிறு பகு­தி­யாகும் இதன் விட்டம் 5 மில்­லி­மீற்றர் அளவு மட்­டுமே. இருந்­த­போதும் எமது பார்­வைக்கு அவ­சி­ய­மான கலங்­க­ளான சழனள யனெ உழநௌ மிகவும் செறி­வாக நிறைந்­துள்ள பகுதி இது­வாகும். நுணுக்­க­மான பார்­வைக்கு மிகவும் அவ­சி­ய­மான பகுதி இது­வாகும். வாசிப்­பது எழு­து­வது முகங்­களை இனங் காண்­பது போன்ற நுண்­ணிய விட­யங்­க­ளுக்கு அவ­சி­ய­மா­ன­தாகும்.
விழித்­தி­ரையின் மிகுதிப் பெரும் பகுதி பரந்த பார்­வைக்கு உரி­ய­தாகும். குறித்த ஒரு பகு­தியை என்­றல்­லாது முழுக் காட்­சி­யையும் உள்­வாங்­கு­வ­தாகும். எனவே மக்­கி­யூலா சிதைவு நோயின் போது பார்வை முழு­மை­யாக இல்­லாது போகாது.
மக்­கி­யூலா பகு­தியில் உள்ள கலங்கள் சேத­ம­டை­வ­தற்குக் காரணம் விழித்­திரை மற்றும் மக்­கி­யூ­லாவின் பின் பகு­தியில் இருந்து அதற்­கான போசனைப் பொருட்­களை வழங்­கு­வ­துடன் அதி­லி­ருந்து கழிப்புப் பொருட்­க­ளையும் அகற்றும் பகு­தி­யான RETINAL PIG ENTEPTHELIU நிiவாநடரைஅ (RPE) ஆகும். இதனால் வெளி­யேறாத கழிவுப் பொரு­ளான னசரளநnஎன்­பது விழித்­தி­ரையில் படிந்து விழித்­திரைக் கலங்­க­ளான RODS AND CONESWEG பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இதுவே பார்வை பாதிக்­கப்­படக் கார­ண­மாகும்.
தடுப்­பது எப்­படி?
இவ்­வாறு பாதிப்­புகள் ஏற்­ப­டா­தி­ருக்க தடுப்­பது எப்­படி என்ற கேள்வி எழு­கி­றது. இதற்குத் தெளி­வான கார­ணங்கள் இல்லை.

புகைத்தல் ஒரு முக்­கிய கார­ண­மாகச் சொல்­லப்­ப­டு­கி­றது. புகைத்­தலா­னது சுவா­சப்­பையை பாதிப்­பதும் புற்­று­நோய்­க­ளுக்கு கார­ண­மாக இருப்­பதும் ஏற்­க­னவே தெரிந்­ததே. எனவே புகைத்­தலைத் தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்­ள­வர்­க­ளுக்கு இது வரு­வ­தற்­கான சாத்­தியம் அதிகம் எனச் சொல்­லப்­ப­டு­கி­றது. எனவே பிரஷர் இருக்­கி­றதா என்­பதை கண்­கா­ணிப்­பதும், பிரஷர் வந்­து­விட்டால் அதைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பதும் அவ­சி­ய­மாகும்.
பழ­வ­கைகள், விதைகள் உட்­பட ஆரோக்­கி­ய­மான உணவு முறையைக் கடைப்­பி­டிப்­பது அவ­சியம். குடும்­பத்தில் ஒரு­வ­ருக்கு இருந்தால் மற்­ற­வர்­க­ளுக்கு ஏற்­படக் கூடிய சாத்­தி­யத்தை அதி­க­ரிக்கும். இருந்­த­போதும் இது பரம்­பரை நோயாகக் கொள்ள முடி­யாது.
யாருக்கு வரும்
வயது சார்ந்த மக்­கி­யூலா சிதைவு நோயை 60 வய­திற்குக் கீழ்ப்­பட்­ட­வர்­களில் காண்­பது அரிது. 65 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களில் 20 பேரில் ஒரு­வ­ருக்கு என்ற ரீதியில் வரு­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது. வயது கூடக் கூட இது அதி­க­ரிக்கும். 80 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களில் நான்கு பேரில் ஒரு­வ­ருக்கு என்ற ரீதியில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­கி­றது. 75 வய­திற்குப் பின்னர் ஆண்­களை விட பெண்­க­ளுக்கு அதி­க­மாக ஏற்­ப­டு­கி­றதாம்.
அறி­கு­றிகள்
மிக மெது­வா­கவும் படிப்­ப­டி­யா­கவும் ஏற்­ப­டு­கிற நோய் என்­பதால் நோயா­ளி­களின் கவ­னத்தை ஈர்ப்­ப­தில்லை.
இருந்­த­போதும் 60 வயதை அண்­டி­ய­வர்கள் சில சாதா­ரண அறி­கு­றி­களைக் கவ­னத்தில் எடுப்­பது அவ­சியம். வாசிப்­ப­தற்கு வழ­மையை விட அதிக வெளிச்சம் தேவைப்­ப­டு­வது. பத்­தி­ரிகை மற்றும் புத்­த­கங்­களில் உள்ள எழுத்­துக்கள் தெளி­வற்­ற­தாகத் தோன்­று­வது, வண்­ணங்கள் வழ­மை­யை­விட மங்­க­லாகத் தோன்­று­வது, முகங்­களை அடை­யாளங் காண்­பது சிர­ம­மாக இருப்­பது போன்ற அறி­கு­றிகள் ஆரம்­பத்தில் இருக்­கலாம்.
அலட்­சியம் பண்­ணா­தீர்கள்
மற்­றொரு அறி­குறி முக்­கி­ய­மா­னது. பொருட்­களைப் பார்க்கும் போது அவற்றில் மாற்­றங்கள் தெரி­யலாம். முக்­கி­ய­மாக நேர் கோடுகள் வளை­வா­கவோ தாறு­மா­றா­கவோ தோன்­றலாம். உதா­ர­ண­மாக நிலத்தில் பதித்­துள்ள மாபிள் கல்­லு­க­ளுக்கு இடையே உள்ள கோடுகள் நெறிந்து முறிந்தோ வளை­வா­கவோ தோன்­று­வது பிரத்­தி­யேக அறி­கு­றி­யாகும்.

பார்­வையில் கரும்­புள்­ளிகள் தோன்­றலாம். மக்­கி­யூ­லாவில் உள்ள கலங்கள் தொடர்ந்து சிதை­வ­டை­யும்­போது அவை அளவில் பெரி­தாகும். பார்வை மோச­மாகப் பாதிக்­கப்­ப­டும்­போது மாயத் தோற்­றங்கள் ஏற்­ப­டலாம். இல்­லாத பொருட்கள் இருப்­பது போன்ற பிரம்மைத் தோற்­றங்கள் வேறெந்த நோயால் பார்வை பாதிப்­புற்­றாலும் தோன்­றலாம். இந்த நிலை பொது­வாக 18 மாதங்கள் வரை செல்­லும்­போது படிப்­ப­டி­யாக இல்­லாது ஒழிந்­து­விடும்.

சிகிச்சை
வயது சார்ந்த மக்­கி­யூலா சிதைவு நோயில் இரண்டு வகைகள் உண்டு. ஈர­லிப்­பான மக்­கி­யூலா சிதைவு நோய், வறட்சியான மக்கியூலா சிதைவு நோய் என்­ப­னவே அவை. பெரும்பாலானவர்களை பாதிப்பது வறட்சியான மக்கியூலா ஆகும்.
இது படிப்­ப­டி­யாக மோச­மாகிப் பார்­வையைக் கடு­மை­யாகப் பாதிக்க பல வரு­டங்கள் செல்­லலாம். இதற்­கெனச் சிறப்­பான சிகிச்சை முறைகள் இல்லை. ஆயினும் பாதிப்பு அதி­க­மா­கா­த­வாறு தடுப்­ப­தற்கு சிகிச்சை அளிக்­க­ப்படும்.
மாறாக ஈரலிப்பான மக்கியூலா மிகக் குறைந்­த­வர்­க­ளையே பாதிக்­கி­றது. ஆயினும் ஒரு சில மாதங்­க­ளுக்குள் பார்­வையை கடுமையாகப் பாதிக்கும். இருந்தபோதும் இதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. புதிய மருந்துகளும் அறிமுகமாகின்றன. ஆயினும் அவற்றை இங்கு விபரிப்பது சாத்தியமானதல்ல.
இறுதியாகமக்கியூலா சிதைவு நோயிற்கு தெளிவான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் இல்லை என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே ஒழுங்கான கால இடைவெளியில் கண் மருத்துவரைக் காண்பதன் மூலமே அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கலாம்.

அதிலும் முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், குடும்பத்தில் இந்த நோயுள்ளவர்களும் இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயுள்ளவர்களுக்கும் இது பொருந்தும். வருமுன் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.


டொக்டர். எம்.கே.முருகானந்தன்

Post a Comment

0 Comments