Subscribe Us

header ads

இலங்கை மென் பந்து கிரிக்கட் அணியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இன்று


இலங்கை மென் பந்து கிரிக்கட் அணி இன்று (2015.04.03) நள்ளிரவு இந்தியா நோக்கிப் பயணமானது. இலங்கை அணியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும் என இலங்கை மென் பந்து கிரிக்கட் சம்மேளன Sri Lanka Softball Cricket Association (SLSCA) செயலாளர் எம்.என்.எம். நவாப் The Puttalam Times-க்குத் தெரிவித்தார். இக் குழுவில் 16 வீரர்களும் 4 அதிகாரிகளும் செல்கின்றனர்.

5 நாட்கள் நடைபெறும் இப் போட்டிகளின்போது, கர்நாடகா மாநிலத்தில் பெங்களூர், மண்டியா அணிகளுடன் தலா 3 போட்டிகள் வீதம் 6 போட்டிகளில் இலங்கை அணி கலந்துகொள்ளும் என்றும், இப் போட்டிகள் சிநேகபூர்வ போட்டிகளாக நடைபெறம் என்றும் அவர் கூறினார். 

எதிர்வரும் டிசம்பர் மாதம் மேற்கு இந்தீய தீவுகளில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளுக்கு முன்பயிற்சியாக இப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்று செயலாளர் நவாப் தகவல் தெரிவித்தார்.

இலங்கை அணியில் புத்தளம் (குறிஞ்சிப்பிட்டி), குருனாகல் (பன்னல), கந்தலாய், மட்டக்களப்பு, கடுவெல, களுத்துரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மென் பந்து கிரிக்கட் ஆட்டக்காரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஐவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இலங்கை அணியின் குறிஞ்சிப்பிட்டி வீரர்கள்

புத்தளம், கல்பிட்டி, குறிஞ்சிப்பிட்டி Irruption Cricket Club கழகத்தின் ஆட்டக்காரர்களான எச்.ஏ. சதாத், ஏ.எச்.எம். ராபி ஆகிய இருவரும் இலங்கை மெ.ப.கி. அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

தேசிய மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் Irruption Cricket Club முறையே 1994, 2001, 2009-ம் வருடங்களில் இரண்டாம் இடத்தை (Runner Up) பெற்றுள்ளது.

இக் கழகத்தின் அணித் தலைவராக (Captain) சதாத்தும், விளையாட்டுக் கழகத்தின் தலைவராக எம்.என்.எம். இபுறாஹீம் (G.S.), உப தலைவராக வைத்தியர் எஸ்.ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் கடமையாற்றுகின்றனர்.

நன்றி (The Puttalam Times)

Post a Comment

0 Comments