இலங்கை இராணுவத்தினர் நேபாளத்துக்கு நிவாரண உதவிகளை
மேற்கொள்வதற்கு சென்றுள்ளனர் எனவும், இலங்கை படையினர்
வெளிநாடொன்றிற்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள சென்றிருப்பது இதுவே முதல்
சந்தர்ப்பம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அமைதி காக்கும் படைக்கு, ஐ.நா.வின் ஊடாகவே எமது படையினர் இணைத்துகொள்ளப்பட்டனர்.
இராணுவத்தினரை வேறு நாடுகளுக்கு சேவைக்கு அனுப்பும் போது பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவது உலக சம்பிரதாயமாகும் எனவும்,
இலங்கை படையினர், நிவாரண நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு பொறுப்பெடுத்த பகுதியில் வீதிகள் கீழிறங்கியிருப்பதாகவும், நிவாரணங்களுடன் மற்றுமொறு விமானம் எதிர்வரும் புதன்கிழமை, காத்மண்டுவை நோக்கி செல்லும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காத்மண்டுவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை நேபாளத்துக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும் அதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவதாவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

0 Comments