Subscribe Us

header ads

நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து விழுந்தன - பலர் படுகாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர்.

நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், மக்கள் தொகை அதிகம் உள்ள தலைநகர் காட்மாண்டுவை உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர்.

எங்கு திரும்பினாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி சென்றன. அரசு ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன.

காட்மாண்டுவில் உள்ள பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒரு பகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெட்டவெளியில் இருக்கும்படி தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்தது.

பாகிஸ்தானிலும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


Post a Comment

0 Comments