Subscribe Us

header ads

மேல் மா. சபையில் “கொடி” சர்ச்சை: ஹிருனிகாவின் வாக்கு எதிரணிக்கு!

கடந்தவாரம் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவில் ஏற்பாட்டில் மஹிந்த மற்றும் கோத்தாவுக்கு ஆதரவளித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது சிறுபான்னமை மக்களின் பிரதிநிதித்துவ அடையாளம் நீக்கப்பட்ட கொடி ஏந்தப்பட்ட விவகாரம் சபையில் பேசப்பட்டதால் இன்று மேல் மாகாண சபையில் சர்ச்சை உருவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் அங்கு பேசப்பட வேண்டியதா இல்லையா என வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜனநாயக கட்சி ஆதரவளித்திருந்த போதும் ஐமசுமு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்ததோடு மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்ரவும் எதிர்த்து வாக்களித்துள்ளார்.
இதனடிப்படையில் 31:24 என்ற வாக்கு அடிப்படையில் மேல் மாகாண சபையில் இவ்விவகாரம் பேசப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments