பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டென்னிஸ் வீராங்கனை
சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் அளித்த பேட்டி பின்வருமாறு:-
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக (டபுள்ஸ்) சானியா மிர்சா
படைத்துள்ள வரலாற்று சாதனை பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளுக்கும்
பெருமைதான். உண்மையில், இந்தியாவிலிருந்து வந்த அவர் அந்நாட்டுக்காகவே
விளையாடி 100 சதவீத உழைப்புடன் ஒரு சிறந்த வெற்றியை பதிவு
செய்திருக்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள டென்னிஸ்
ரசிகர்களுக்கும் இந்த வெற்றி மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. சானியாவை
திருமணம் செய்வதற்கு முன்னரே எனக்கு டென்னிஸ் விளையாட்டு பிடிக்கும்.
இப்போது முழுமையாக டென்னிஸில் மூழ்கிவிட்டேன். சானியா விளையாடும் போட்டிகளை
ஒன்று கூட விடாமல் பார்த்துவிடுவேன். பெரும்பாலான போட்டிகளில் நான்
இல்லையென்றால் அவர் விளையாடவே மாட்டார். ஏனென்றால் அந்த அளவுக்கு சானியாவை
நான் நேசிக்கிறேன்.
இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.


0 Comments