மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்,மோசடிகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தமான விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சிலர் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டார்.
ஊழல், மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுதி,
தராதரம் பாராது சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக
மேற்கொள்ளப்படும் சட்டரீதியான விசாரணைகளை தாம் எதிர்க்கவில்லை எனவும்
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை
சேர்ந்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்தப் பொதுத் தேர்தலில்
போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


0 Comments