இலங்கையில் தற்போது செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் அனைவருக்கும் நுண்கடன் திட்டம் ஒன்றினை ஊடக அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கடன் திட்டம் 1 இலட்சம் ரூபா வரை வழங்கப்படவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள்,கமரா,கணனி என்பவற்றை பெற உதவுகின்றது.
மேலும் இக்கடனை பெற உள்ள ஊடகவியலாளர்கள் தகவல் தொடர்பாடல் அமைச்சின் அடையாள அட்டையை பெற்றிருப்பது அவசியமாகும்.
இக்கடனுதவிக்காக விண்ணப்பிக்கும் இறுதி திகதி இம்மாதம் 30 திகதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments