-UCP-
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில், முன்னாள் நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட மலசலகூட கழிவு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் Sewerage Treatment Plant இன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்திருக்கின்ற நிலையில் அவற்றை மீளாய்வு செய்வதற்காக நகர பிதா தலைமையில் நகர சபை உத்தியோகத்தர்களும் இந்நிலையத்திற்கு இன்று (2015.04.08) விஜயம் செய்தனர்.
புத்தளம் நகரில் மலசல கழிவுகளை அதற்குரிய குழிகளில் (Soakage pit) தேக்கிவைப்பதன் காரணமாக நிலக்கீழ் நீர் அசுத்தமடைந்து நகரில் இருக்கின்ற கிணறுகளிலும், குழாய்களிலும் இருக்கின்ற நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்ததாக இல்லை. அதில் அதிகப்படியான அசுத்தம் காணப்படுவதை நகர சபை கண்டறிந்ததை தொடர்ந்து மேற்படி சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றை அமைத்துத்தரும்படி நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் வேண்டுகோள்விடுத்தார். அதைத் தொடர்ந்தே சுமார் 12 கோடி ரூபா செலவில் இந்நிலையம் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.








0 Comments