முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல்
ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற
உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ள கடிதத்தில்
தற்பொழுது வரை 114 பேர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கையொப்ப கடிதத்தில் மனைவியிடம் கேட்டுவிட்டு
இன்று கையொப்பமிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதனை சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
0 Comments