Subscribe Us

புத்தாண்டு காலப்பகுதியில் தலைநகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்


தமிழ், சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திக­தி­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் தலை நகர் கொழும்பு மற்றும் ஏனைய பிர­தான நக­ரங்­களின் பாது­காப்­பினைப் பலப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் விசேட போக்­கு­வ­ரத்து திட்­டங்­களை அமுல் செய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர இதனைத் தெரி­வித்தார்.
இந் நிலையில் கொழும்பு நகர் பகு­தியில் மட்டும் 500 பொலிஸார் மேல­திக கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 200 பேர் வெளி மாவட்­டங்­களில் இருந்து கொழும்­புக்கு விஷேட கட­மைக்­காக அழைக்­கப்­பட்­ட­வர்கள் எனவும் சிவில் உடையில் மேலும் பலரை கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் இதன்போது மேலும் தெரி­வித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,
புத்­தாண்டு காலப்­ப­கு­தி­யாக ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் இக்­கா­லப் ­ப­கு­தியில் விசேட பாது­காப்பு, போக்குவரத்து ஒழுங்­கு­களை நாம் செய்­துள்ளோம்.
குறிப்­பாக இக்­கா­லப்­ப­கு­தியில் போக்கு வரத்து தொடர்பில் மேல் மாகாணம் பல சிக்­கல்­களை எதிர்­கொள்­ளத்­தக்­கது. எனவே மேல் மாக­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ரவின் வழி­காட்­ட­லுக்கு அமை­வாக போக்கு வரத்து ஒழுங்குபடுத்­தல்கள் அம்­மா­கா­ணத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. போக்­கு­வ­ரத்­தினை ஒழுங்கு படுத்­து­வ­தற்­கா­கவும் நெரி­சல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் நகர்ப் பகு­தியில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதி­கா­ரி­களை நாம் விசே­ட­மாக கட­மையில் ஈடு­ப­டுத்­து­வதன் ஊடாக போக்குவரத்து சீர் திருத்­ததை எதிர்ப்­பார்க்­கின்றோம்.

இதனை விட இக்­கா­லப்­ப­கு­தியில் குடி போதையில் வாகனம் செலுத்­து­வோரை கைதுசெய்ய விசேட திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் உள்ள ஒவ்­வொரு பொலிஸ் நிலை­யங்கள் ஊடா­கவும் இந்த திட்டம் நடை முறைப்­ப­டுத்­தப்­படும்.

குறிப்­பாக நகரப் பகு­தி­களில் சன நெரிசல் இந் நாட்­களில் காணப்­படும் நிலையில் பணப்­பையை கள­வா­டுதல், பயணப் பொதி­களைக் கொள்­ளை­ய­டித்தல் போன்ற சிறு சிறு சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தடுக்க ஒவ்­வொரு நகரப் பகு­தி­யிலும் சிவில் உடையில் பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
எனினும் இவ்­வா­றான சன நெரிசல் மிக்க இடங்­க­ளுக்கு வரும் பொது மக்கள் தம்­முடன் சிறு­வர்­களைக் கூட்டி வரு­வார்­க­ளாக இருந்தால் அது தொடர்­பிலும் தமது உடை­மைகள் தொடர்­பிலும் விழிப்­பாக இருக்­கு­மாறு நாம் பொது மக்­களைக் கேட்­டுக்­கொள்­கின்றோம்.
இந் நிலையில் இந்த பண்டிகைக் காலத்தில் விபத்துக்களைக் குறைக்கவும் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் மிக அவதானமாக செயற்படுமாறு பொது மக்களை நாம் கோருகின்றோம் என்றார்.

Post a Comment

0 Comments