Subscribe Us

header ads

பதவி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள மஹிந்தவுக்கான தீர்வு என்ன?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி காய்ச்சலினால் அவதிப்படுகின்றார் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை தற்போது பீடித்திருக்கும் காய்ச்சல் மருந்தினால் குணமாகாது எனவும், பதவியொன்றை வழங்கினால் மாத்திரமே குணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்து விட்டார்கள் என்ற யதார்த்தத்தை மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்து வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 
அரசியல் அனாதைகளான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே மஹிந்தவை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
மஹிந்த ஆட்சியில் இருந்தால் மாத்திரமே தமக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என்பதனை புரிந்து கொண்டமையினால் இவ்வாறு மகிந்தவுக்கு பின்னால் போலியாக கோஷமெழுப்பி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் தமது ஓய்வின் பின்னர் நேர்மையானவர்களாக நடந்து கொண்டு வருகின்றார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ச கொஞ்சம் கூட நேர்மையான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே முன்னாள் ஜனாதிபதிகளில் மஹிந்த மாத்திரமே மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments