கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, இன்று இடம் பெறவுள்ள பாராளுமன்றக்கூட்டத்
தொடரில் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் இன்று பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷவின் பிறந்த
தினம் என்பதால் பாராளுமன்றக்கட்டிடத் தொகுதியில் அவரின் பிறந்த
தினத்தை கொண்டாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று
தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தலைமையிலான அரசாங்கம்
உருவாக்கப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக பாராளுமன்ற அமர்வில்
பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் இன்று பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள 19 ஆவது திருத்த
சட்டம் மீதான விவாதத்திலும், பஷில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பஷில் ராஜபக்ஷவுக்கு
பாராளுமன்றத்தில் மூன்று மாதகால விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.


0 Comments