எதிர்வரும் மாதம் ஐக்கிய இராச்சியத்தில்
பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின்
பிரதமர் டேவிட் கமரூன் அரசின் 100 நாள் செயற்திட்டத்தின் அடிப்படையிலான
தேர்தல் வாக்குறுதியை முன்வைத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்திருந்தபோது அவரது வாகனம் வரை நடந்து வந்து
ஜனாதிபதியை வரவேற்றிருந்த ஐக்கிய இராச்சிய பிரதமர் இலங்கையின் அரசியல்
விவகாரங்கள் தொடர்பில் ஆழமான தனது பார்வைகளைக் கலந்துரையாடியிருந்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில்
தனிப்பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறாது என கருத்துக்கணிப்புகள்
தெரிவித்து வரும் நிலையில் தமது தேர்தல் வாக்குறுதியாக 100 நாள்
திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள பிரதமர் டேவிட் கமரூன், தாம் வெற்றி
பெற்றால் திட்டமிட்டிருக்கும் பல்வேறு செயற்பாடுகள் குறித்து
விளக்கியுள்ளதுடன் அவற்றை முதல் நூறு நாட்களுக்குள் செயற்படுத்தவும்
வாக்குறுதியளித்துள்ளார். குறிப்பாக வாரத்திற்கு 30 மணி நேரத்திற்குக்
குறைவாக வேலை செய்பவகளுக்கான வருமான வரி விலக்கை 2020ல் அமுல்படுத்தும்
வகையிலான சட்டமூலத்தை நிறைவேற்றுவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மே மாதம் 7ம் திகதி அங்கு பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.


0 Comments