உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் எட்டாவது ஐபிஎல் தொடரின் தொடக்கவிழா இன்றிரவு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
எட்டாவது இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்றிரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக தொடக்க விழா நடைபெறவுள்ளது.
“இந்தியாவின் விழா” என்ற பெயரில் சுமார் 2 மணி நேரம் விழா நடக்கவுள்ளது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை சிறப்பிக்கும் வகையில் ஸ்பெஷல் நிகழ்ச்சியும், நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் மதியத்திற்கு பின் இடியுடன் கூடிய மழை வர 60 சதவீத வாய்ப்புள்ளதாகவும், இரவிலும் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாளை முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றிலும் 5000 பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீரர்கள் ‘டிரசிங் ரூம்’ மற்றும் முழு மைதானத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் சி.சி.டி.வி கமெராவும் பொருத்தப்பட்டுள்ளன.




0 Comments