Subscribe Us

header ads

பாராளுமன்றில் இரவு தங்கிய உறுப்பினர்களின் அட்டூழியத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இரவு நேரத்தில் தங்கியிருந்து விளக்குகளை ஒளிரச் செய்திருந்தமையினால் ஐந்து லட்சம் ரூபாய் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஜித் மன்னப்பெறும தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பாராளுமன்றில் விளக்கேற்றியமைக்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தேயாகும்.
இவ்வாறான எதிர்ப்பினால் பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமையினால் பாராளுமன்றத்தை மாட்டுப் பட்டியாக்கிவிட்டார்கள். எனினும் மாடுகள் மதுபானம் அருந்துவதில்லை.
இவர்கள் மதுவும் அருந்தியுள்ளார்கள். பாராளுமன்றத்தின் அனைத்து ஏ.சிகளும் பயன்படுத்தப்பட்டிருந்ததோடு, அனைத்து விளக்குகளும் ஒளிரவைக்கப்பட்டிருந்தன.
அது மாத்திரமல்லாது, பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்த அனைத்து உணவுகளையும் உண்டு முடித்துவிட்டார்கள். 
காலையில் பாராளுமன்றத்திற்கு சென்ற ஏனைய உறுப்பினர்களுக்கு உண்ணுவதற்கு உணவு இல்லாமல் போய்விட்டது.
மேலும் அரைகுறை ஆடைகளை அணிந்துக்கொண்டு சில பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments