Subscribe Us

header ads

100 வரை எண்ண தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 எண்ணத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் ஆறு கையொப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த ஆவணத்தில் 82ம் இலக்கத்திற்கு பின்னர் 88 என்னும் இலக்கம் இட்டதன் காரணமாக இவ்வாறு கையொப்பங்கள் குறைவடைந்துள்ளன.
88ம் இலக்கத்தை இட்டு கையொப்பமிட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மல கொதலாவல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.
மேலும் அவர்கள் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸை நீக்குமாறும் கோரியிருந்தனர்.

Post a Comment

0 Comments