Subscribe Us

header ads

உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த சானியா-சாய்னாவுக்கு இந்திய பாராளுமன்றம் பாராட்டு


விளையாட்டில் உலக சாதனை படைத்த நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் சானியா மிர்சா ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இன்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், “உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சாய்னா நேவால் பெற்றிருக்கிறார். இதேபோல் டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா எட்டியிருக்கிறார்.

இவர்களின் இந்த சாதனைகள் நாட்டிற்கே பெருமை அளிக்கும் விஷயம். இந்த சாதனைகள், வளரும் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும். எதிர்காலத்திலும் அவர்களின் சாதனைகள் தொடர நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments