லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சு, இலங்கை தேசிய கட்டுமான சங்கம் NCASL,கட்டுமான தொழிற் அபிவிருத்தி அதிகார சபை CIDA மற்றும் இணைந்து முன்னேறிய கட்டுமான பயிற்சிக் கூடமும் (ACTA)இணைந்து கட்டுமானத்துறையிலுள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக காணப்படும் சவால்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப் பட்டறைகளை நாடு முழுவதிலும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பயிற்சிப் பட்டறையானது ‘தேசிய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு 2015’ என்ற தொனிப் பொருளில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள நிர்மாண நிலையத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதற்கு, மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 230க்கும் அதிகமான கட்டட ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டதோடு, இந்த பயிற்சிப்பட்டறைக்கு பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் செயலாளர் திருமதி சி.டி.டபிள்யூ. அழகக்கோன் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சிப் பட்டறை தொடர்பாக லபார்ஜ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் Charlotte Boutboul கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல நிறுவனங்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டதுடன், உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களுக்கு ஆரோக்கியத்தையும் மற்றும் பாதுகாப்பையும் குறித்து கவனம் செலுத்தும் முகமாக லபார்ஜ் நிறுவனம் முதற்படியாக நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கைகுள்ளும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் அளிக்கின்றோம். நாம் ஊழியர்கள் தொழில்புரியும் இடங்களிலுள்ள உபகரணங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்துகின்றோம்.
ஆடைத் தொழிற்சாலையில் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது அதன் உத்தரவாதம் மற்றும் கனரக இயந்திரங்களது செயற்பாடுகள் மாத்திரமன்றி ஊழியர்களது பாதுகாப்பு குறித்தும் இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
இந்த பயிற்சிப் பட்டறையின் போது லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் முக்கிய உறுப்பினரான அத்துல கருணாநாயக்க கலந்து கொண்டதுடன் ஊழியர்களது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக நடைமுறையான பல ஆலோசனைகளையும் வழங்கியதோடு இந்த பயிற்சிப்பட்டறையானது இலங்கை முழுவதிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சிப் பட்டறையின்போது தரமான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதனால் கட்டுமானத் துறையில் தொழில்புரியும் ஆண், பெண் ஊழியர்கள் தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் அத்தோடு விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் முக்கிய குறிப்புக்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதன்போது கலந்து கொண்ட பிரதி தொழில் ஆணையாளர் (தொழில்துறை பாதுகாப்பு) திருமதி டபிள்யூ.எல்.எஸ். விஜேசுந்தர கூறுகையில்,
2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுமான துறை தொடர்பான தேசிய கொள்கைகள் அடங்கிய 7 அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொள்கைகளானது தொழிற்துறையில் வேலை செய்யும் ஊழியர்களது பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் ஒரு வழிமுறையாகவே அமையும் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய அதிகாரிகளுக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையில் திறந்த கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது தொழிற்சாலைகள் சட்டத்தின் 84ஆவது சரத்தின் கீழ் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவுள்ள சில விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த திருமதி சம்பிக்கா அமரசிங்க, பல்வேறு புதிய கொள்கைகளும் சரத்துக்களும் முன்மொழியப்பட்டுள்ள போதிலும் இவற்றை அரசின் 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் போது நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நீதி அமைச்சின் கீழ் முன்வைக்கப்படுகின்ற சட்ட விதிமுறைகள் தொடர்பாகவும் அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கட்டுமானத்துறையிலுள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நாடு முழுவதிலும் பயிற்சிப்பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் மேற்கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments