Subscribe Us

அஸ்கிரிய மகாநாயக்கரின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது (படங்கள் இணைப்பு)


சிங்கப்பூரில் காலமான அஸ்கிரிய மகாநாயக்கர் வண. உடுகம புத்தரக்கித தேரரின் பூடவுடல் நேற்று இரவு இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது

இந்தநிலையில் மகாநாயக்கரின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் எதிர்வரும் 12ம் திகதி தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்க கட்டிடங்களில் மஞ்சள் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பௌத்த சாசன அமைச்சு பணித்துள்ளது.

தேரர் நேற்று சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் தமது 85வது வயதில் காலமானார்.

இவரது பூதவுடலை இலங்கைக்கு எடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தின் சார்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தார்.

மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் கண்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளன.










Post a Comment

0 Comments