உங்கள்
ஒவ்வொரு கிராமங்களின் தேவைகளையும் அறிந்தே, நீங்கள் என்னிடம் கேட்காமலே
உங்களுக்கான உதவிகளை நான் வழங்கி வருகிறேன்... மன்னார் சாவற்கட்டில்
மக்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் வடக்கு கிராம அபிவிருத்தி
அமைச்சர்...
மன்னார் சாவற்க்கட்டு
கிராமத்தில் வசித்துவரும் மக்களில் அக்கிராம மாதர் கிராம அபிவிருத்தி
சங்கத்தினூடாக வறுமையில் வாழும் மக்களை தெரிவு செய்து சுமார் 150
குடும்பங்களுக்கு சாரம் மற்றும் சேலை என்பன வழங்கும் நிகழ்வு 19-04-2015
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் அன்னை வேளாங்கன்னி ஆலய முன்றலில்
இடம்பெற்றது, நிகழ்வில் அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில் ஒவ்வொரு
கிராமங்களின் நிலைமைகளை நான் அறிந்தே என்னிடம் நீங்கள் கேட்காமலே
உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றேன், இதே போன்று எமது அனைத்து
கிராமங்களுக்கும் என்னாளான் உதவிகளை செய்து தருவேன் எனவும் தெரிவித்தார்.




0 Comments