அபு அலா –
நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலைமைப்புச்சபை அமைச்சினால்அட்டாளைச்சேனையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்ட இடங்கள் நகரஅபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலைமைப்புச்சபை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (10) பார்வையிட்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பொது விளையாட்டு மைதானம், பொது நூலகம், கடற்கரை பூங்கா, சந்தை சதுக்கம், ஆத்தங்கரையோர வாவி, புதிய பிரதேச சபை கட்டடம் போன்றஇடங்கள் பார்வையிடப்பட்டது.
இந்த இடங்களை பார்வையிட நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர்யு.எல்.எம்.என்.முபீன், பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.எஸ்.ஜயசுந்தர, கேர்ணல் சிட்சிறி, மேஜர்.குணசேன, திட்டப் பணிப்பாளர் மகிந்த விதாரண, பிரதிப்பணிப்பாளர் சோமரத்ன,அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளும் வேலைகளை மிக துரிதமாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையினரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கேட்டுக்கொண்டார்.
0 Comments