கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து புத்தளம் – மன்னார் வீதியின் எழுவான்குளம் பிரதேசத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் சுமார் 4 அடி உயரம் வரை நீர் வழிந்தோடுவதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக குறித்த பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் வான் கதவும் திறக்கும் தருவாயில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நீர்த் தேக்கங்களுக்கு அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


0 Comments