Subscribe Us

சிங்கள தினப் போட்டியில் வெற்றி பெற்ற சின்னப் பாலமுனை அல் ஹிக்மா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அபு அலா -


அக்கரைப்பற்று வலய மட்டத்தில் டம்பெற்ற சிங்கள தினப் போட்டியில் வெற்றி பெற்ற சின்னப் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் ழங்கி வைக்கும் நிகழ்வு இன்றுவியாழக்கிழமை  (09) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எச்.அப்துர் றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இச்சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் 2015 ஆம் ஆண்டு சிங்கள தினப் போட்டியில் வெற்றிபெற்ற எப்.ஐ.பறூஸா, எம்.மபாஸா, ஏ.ஆர்.றிஸ்கா ஆகிய மாணவிகளுக்கான சான்றிதழ்களை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களான ஐ.எல்.எம்.பாயிஸ், எம்.ஐ.சாமிலா, எம்.ஏ.சீ.உவைத்துல்லா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன. 




Post a Comment

0 Comments