சமூகத்தில் சமூக சேவைகள் நடைபெறுகிறதோ இல்லையோ தான் சமூக சேவையாளர் என இனம் காட்டிக்கொண்டு பலரும் நாளுக்கு நாள் உதயமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.உண்மையில் தான் நேரடியாக அரசியலில் களமிறங்கி வெற்றி வாகை சூடித் தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.தனது மறைமுக ஆதரவின் மூலமும் சமூக சேவைகளினை செய்ய முடியும் என்பதனை எமது சமூக சேவையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.நாட்டில் தங்களை சமூக சேவையாளராக இனம் காட்டிக் கொண்டு நாளுக்கு நாள் உருவாகும் புது முகங்களின் தோற்றம் இலங்கை முஸ்லிம் அரசியல் இருப்புக்களினைகேள்விக் குறியாக்கும் என்பதில் ஐயமில்லை.
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை
சரி, சமா¬தான கற்¬கைகள் நிலை¬யத்தின் பணிப்¬பாளர் எஸ்.எல்.றியாஸ் அவர்களின் உண்ணா விரதப் போராட்ட விடயத்திற்கு வருவோம்.இவர் கல்முனை மாநகரம் தற்போதைய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வில்லை என்பதே இவரது பிரதானமான கோரிக்கையாகும்.இவர் இது தொடர்பாக வெளியிட்ட 15 அம்சக் கோரிக்கையில் “ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் தமது காணிகளை, தொழில்களை இழந்த மற்றும் பல்வேறு வகையில் பாதிப்புற்ற ஒலுவில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஏற்ற வகையில் உடனடியாக நிவாரணம் வழங்கப்படவேண்டும்” என்ற கோரிக்கையினைத் தவிர மற்ற அனைத்தும் கல்முனை நகரம் சார்ந்த தேவைகளாவே உள்ளன.
இலங்கையின் அனைத்து நகரங்களும் இவ் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள் வாங்கப்பட்டு கல்முனை மாநகரம் மாத்திரம் புறக்கனிக்கப்ப்படுமாக இருந்தால் இவரது கோரிக்கை நியாயமானது எனலாம்.இலங்கையின் எவ் முஸ்லிம் ஊர் இவ் வேலைத் திட்டத்தில் உள் வாங்கப்பட்டுள்ளது..?? நீங்கள் என்ன சமூக சேவைக்கு எல்லை நிர்ணயித்த சமூக சேவையாளரா..??
நூறு நாள் வேலைத் திட்டத்தில் இவரது கோரிக்கைகள் உள் வாங்கப்பாடல் வேண்டும் என்பதற்கும் இவரது கோரிக்கைகளிற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை.நூறு நாள் வேலைத் திட்டம் என்பது ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்றாகும்.ஆனால்,இவரது கோரிக்கைகள் எதுவும் அதில் உள்ளடக்கப்பட வில்லை.எனவே,இவர் இக் கோரிக்கைகள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள் வாங்கப்பட வேண்டுமாக இருந்தால் அதன் வரைவுகள் மேற்கொள்ளப்பட்ட அக் காலப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களினை முன்னெடுத்திருக்க வேண்டும்.இப்போது இவ் வேலைத் திட்டத்தில் இக் கோரிக்கைகளினை உள் வாங்குமாறு கூறுவது நகைப்பிற்குரியது.
உண்மையில் இவ் அரசு தனிப்பட்ட முறையில் ஒரு ஊரிற்கு அல்லது சமூகத்திற்கு செய்யும் விடயங்களில் அதிகம் கவனம் எடுக்காது நாட்டு மக்கள் யாவரிற்கும் செய்யக் கூடிய பொதுவான விடயங்களிலே அதிக கவனம் செலுத்துகிறது என்பது யாவரும் அறிந்ததே.இச் இவைகளினை இவ் அரசு செய்து தரவில்லை என குற்றம் சுமத்துவது நியாயமும் அல்ல.எனினும்,இக் கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டும் என்பதனை மறுப்பதற்கும் இல்லை.ஒரு நன்கு ஆராச்சி செய்யும் தன்மை உடையவர் இன் நேரத்தில் இவ் அரசிற்கு அதன் திட்டங்களினை நிறைவேற்றுவதில் உதவுவரே தவிர சங்கடத்திற்குள் அகப்பட வைக்க மாட்டார்.
எனவே,இவ் விடயங்களினை வைத்து இவ் அவசர உண்ணா விரதப் போராட்டத்தின் பின்னணியினை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அது மிகவும் குறுகிய காலப் பகுதியினுள் வர உள்ள தெர்தலிற்கு மிகவும் குறுகிய காலப் பகுதியில் பிரபலம் அடைவதற்கான ஒரு முயற்சி என்றே எண்ணத் தோன்றுகிறது.தற்போதைய அரசியல் வாதிகளால் முடியாது வித்தியாசமான முறையில் களமிறங்கி இருக்கும் இவர் தீர்வு கிட்டும் என்று தனது போராட்டத்தினை கை விட்டுள்ளார்.இதன் மூலம் தீர்வு கிட்டினால் உண்மையில் இவர் தலை மேல் தூக்கி வைத்து பாராட்டப்பட வேண்டிய ஒருவர்.ஆனால்,கோரிக்கைகள் பற்றி யாரும் கவனம் எடுத்த தகவே தெரியவில்லை.இவரது அரசியல் பிரவேசத்திற்கு ஒரு வித்தியாசமான படிப்பினையினை இது வழங்கும் என்பதனைத் தவிர வேறு பயன்கள் எதனையும் இதன் மூலம் இவர் அடையப் போவதில்லை.
துறையூர் எ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments