Subscribe Us

மைத்திரிபால சிறிசேன கௌரவமான முறையில் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால்…


அரசியல் களத்தில் கைப்பொம்மையாக செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக ஜனாதிபதி பதிவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு கிருலப்பனையிலுள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் உயர்பதிவியிலுள்ளோருக்கு முதுகெழும்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், மைத்திரிபால சிறிசேன மேடையில் ஏறிய கூட்டத்தில் பொதுமக்கள் கூக்குரலிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியாக ஸ்ரீலங்காவில் பதவி வகித்தவர்கள் எவருக்கும் இவ்வாறு நடந்ததில்ல எனக் குறிப்பிட்ட அவர், அரசு மீது இருக்கும் விரக்தியின் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன ஏறிய கூட்டத்திற்கு பொதுமக்கள் இவ்வாறு கூக்குரலிட்டுள்ளதாக தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டம் நாட்டிற்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளதாகவும் புலம்பெயர் அமைப்பு, பிரபாகரின் கிளைகளை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கம் வழிவகுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதற்கு உதவி செய்து வருகின்றதாகவும் இந்த சக்திகளை அழிப்பதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

100 நாள் வேலைத்திட்ட முடிவடைந்த பின்னர், மைத்திரிபால சிறிசேன கௌரவமான முறையில் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். 

இல்லாவிடின் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments