Subscribe Us

header ads

அல் அக்ஸா மாணவர்களின் ஒழுக்க நிலையும் சீருடையும்! ஒரு பழைய மாணவனின் பார்வையில்!!


நவ நாகரீக உலகில் புதையுண்டு தவிக்கும்
அல் அக்ஸா தேசிய பாடசாலை
மூன்று பக்கமும் கடல் அன்னையின் அறவணைப்பில் செல்லப் பிள்ளையாய்  தலை நிமிர்ந்து நிற்கும் கல்பிட்டிப் பெரு நகரிற்கு எமது இலங்கைத் தாய்த் திருநாட்டில் காணப்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய தேசியப் பாடசாலைகளில் ஒன்றென தனக்கென ஒரு இடத்தினை முத்திரை பதித்துக்கொண்ட நாடு முழுவதிலுமுள்ள பல கல்விமான்களை தன் பாசறையிலே மடி சுமந்து பயிற்றுவித்த எமது அல் அக்ஸா தேசிய பாடசாலை ஒரு பெரும் பொக்கிஷம்.

அன்றைய அல் அக்ஸா தேசிய பாடசாலையினைத் தேடி இலங்கை முழுவதுமுள்ள மாணவர்கள் படையெடுத்தனர் மகத்துவத்தை உணர்ந்து கல்வியின் தரத்தினை உணர்ந்து. ஏன் கல்வியின் இமயமாய் விளங்கும் யாழ் நகரில் இருந்து கூட வந்து விடுதியில் தங்கியிருந்து எமது  அல் அக்ஸா தேசிய பாடசாலையிலே பயனடைந்து நாட்டின் பல பகுதிகளிலும் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஆயிரக்கணக்கில். ஆனால் காலத்தினைப் போன்றே அந்த நிலையும் காலத்தோடு வேகமாய் உருண்டோடி விட்டது. இன்றைய நிலை அதற்கு முற்றிலும் நேர்மாறாய் காணப்படுகின்றது. இன்னும் காலம் செல்லச் செல்ல எமது அல் அக்ஸா தேசிய பாடசாலை அல் அக்ஸா ஆரம்பப் பாடசாலை ஆகிவிடுமோ என்ற ஏக்கம் அதில் கல்வி பயின்ற அனைவருக்கும் துளிர்விட்டுக் கொள்கின்றது. இவ்வாறு இது ஒரு புறம் இருக்கட்டும் அடுத்த கட்டுரையில் இதனைப்பற்றி அலசி ஆராய்வோம்.

இப்போது எமது அல் அக்ஸா தேசிய பாடசாலை நவ நாகரீக உலகில் எவ்வாறு புதையுண்டு தவிக்கிறத்து என்ற சாதனைத்துளிகளை நுனிப்புல் மேய்வதைப்போல் நோக்கி விட்டுச் செல்வது சாலச்சிறந்தது. ஆம் கசப்பான உண்மைகள் தான் இல்லை என்று நிராகரித்து விட்டுச் செல்ல முடியாது. நிச்சயமாக ஆம் என்றே கூற  வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். என்ன செய்வது காலம் கெட்டு விட்டது இந்த வயது அப்படித்தான் என்று பூசி மெழுகுவது புத்திசாலித்தனமான பதிலல்ல. மாறாக இவற்றிற்கான பிரதியீடுகளை ஆராய்ந்து இவைகளை பிடுங்கி எரிவதே புத்திசாலித்தனமும் காலத்தின் தேவையுமாகும்.

விடயத்திற்கு வருவோம் எமது கல்விக்கூடம் எவ்வாறு இந்த நாகரீக உலகில் புதையுண்டு தவிக்கிறது என்ற கேள்வி எழுவது கட்டாயமே! நிச்சயமாக ஒரு பாடசாலை என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் அப் பாடசாலை ஆசிரியர்களின் கடமைகள் என்ன? மாணவர்களின் பொறுப்புகள் என்ன? ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கல்வி அமைச்சானது உருவாக்கி அனைத்துப் பாடசாலைகளுக்கும் கையளித்து கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவினையும் பிறப்பித்துள்ளது. இதற்கு எமது தேசிய பாடசாலை ஒன்று மட்டும் விதி விலக்கல்ல. பிற சாதாரன ஆரம்பப் பாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்களோடு எமது பாடசாலை ஒழுக்க விழுமியங்களை ஒப்பிட்டு நோக்க முடியுமா என்ற கேள்விக்கு நிச்சயமாய் என்னிடத்தில் நிசப்தம் மட்டுமே பதிலாய் காத்திருக்கிறது.

அந்த வகையில் எமது பாடசாலையின் சீருடை விடயத்தினைக் கையிலெடுப்போம். பாடசாலைச் சீருடைக்கென்ற ஒழுங்கினை வகுத்துத் தந்திருக்கின்றது கல்வியமைச்சு. ஆனால் இன்று எமது பாடசாலையின் சீருடை முறையை நோக்குகையில் புதிய  நவ நாகரீக ஆடைகளின் வடிவமைப்பினை ஒத்ததாகவே காணப்படுகின்றது. வெள்ளைச் சீருடைக்கேயுள்ள அந்தஸ்தும் அதற்கென உள்ள தனி மரியாதையும் இன்று இங்கு குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது என்பது கசப்பான உண்மைதான்.
அடுத்து  கல்வி அமைச்சின் சட்டக் கோவையிலுள்ள சீருடையோடு தொடர்புபட்ட விடயம்தான் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் தொப்பி அணிவது. ஆனால் இன்றைய பாடசாலை செல்லும் எமது உடன் பிறப்புக்கள் தொப்பி அணிவது அறுவருக்கத்தக்க ஒன்றாகவும் இன்றைய நவீன காலத்தில் கேலிக்கைக்குறிய ஒன்றாகவுமே கருதுகின்றனர். வெறுமனே ஆசிரியர்களின் கண் துடைப்பிற்காகவே அவர்களைக் கண்டதும் தலையில் கவிழ்த்திக் கொள்வதும் பின்னர் அதனை காட்சட்டைப் பைக்குள் அணிவித்து அழகு பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

மேலும் கல்வி அமைச்சின் கண்டிப்பான உத்தரவு பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம். இதனை எமது தேசிய பாடசாலை மாணவர்களோடு ஒப்பிட்டு பேச வார்த்தைகள் போதுமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க கூறியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக கூறித்தான் ஆக வேண்டும். இந்த விடயத்தில் முன்னர் நான் குறிப்பிட்டிருந்த நவ நாகரீகம் எந்த அளவிற்கு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதனை நான் கூறித்தான் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கு இல்லை என்பது எனது தெளிவு. இன்று சினிமாவினதும் விளையாட்டுக்களினதும் மோகம் எமது பாடசாலை மாணவர்களோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது என்பது நிராகரிக்கப்பட முடியாத உண்மையே. பாடசாலை மாணவர்களுக்கே உரிய சிகை அலங்காரப்பாணி ஒருபுறம் இருக்க இன்று எமது சகோதரம் சினிமா நாயகர்களையும் விளையாட்டு ஜாம்பவான்களையும் சிகை அலங்காரத்தின் முன்னுதாரணமாக முன்னிறுத்தி செயற்படுவதே காலத்தின் தேவையாக மாறிவிட்டது எம் மாணவர்கள் மத்தியில்.

இன்னும் ஓர் துர்ப்பாக்கிய நிலைதான் எமது பாடசாலையின் ஆசிரியர் மாணவர் உறவு. அன்று மாணவர்களுக்கு ஆசிரியர்;கள்  மேல்  உள்ள பய பக்தியினை ஆராயுமிடத்து ஆசிரியர் ஒரு வீதியில் சென்றால் மாணவர்கள் ஆசிரியர் மீது கொண்ட பய பக்தியின் காரணமாக அடுத்த வீதியினை நாடிச்செல்ல வேண்டிய சம்பவங்களும் அவர்களோடு பணிவுடன் உறையாடுவதும் வரலாற்று உண்மையே. ஆனால் இன்றைய நவ நாகரீக மேகத்தில் புதையுண்டிருக்கும் எமது சகோதரம் ஆசிரியர்களின் புகைப்படங்களை எடுத்து முகப் புத்தகத்தில் (குயஉந டீழழம) உழஅஅநவெ களுக்கு பயன்படுத்தும் ஓர் சீர் கெட்ட காலமாக மாறிவிட்டது. இன்றைய ஆசிரியர் மாணவர் உறவினை விபரிக்க இதைவிட ஓர் சிறந்த உதாரணம் என்னிடமில்லை. மேலும் பெற்றோர்களுக்கு அடுத்த தரத்தில் வைக்கப்பட வேண்டிய ஆசிரியப் பெருந்தகைகள் இன்று பள்ளி நண்பர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளும் இடங்களில் அவர்களின் வாய்களுக்குள் அறைபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது கண்கள் கலங்கப்பட வேண்டிய விடயமே.

அடுத்து மாணவ மாணவிகளுக்கிடையிலான உறவுகள். இதனைப் பற்றி தெளிவுபடக் கூறுவதற்கு வாய் கூசுகின்ற அளவிற்கு மாறிவிட்டது. கேட்டால் ஆண் பெண் சமத்துவம் நவீன காலம் நட்பு என்ற அற்புத வார்த்தைகள் அவர்களை ஆதரிக்கின்றது. இதற்கு சிறிய எடுத்துக் காட்டு இன்றைய நிலையில் கல்வி பயில்வது 6ம் தரத்தில் அவர்களால் எழுதப்படுகின்ற எழுத்தினை புரிந்து வாசிக்கத் தெரிகிறதோ இல்லையோ காதல் என்ற வார்த்தையும் அதன் அனுபவமும் 60 வயதை எட்டியவர்களை விட அதிகம் என்றால் மிகையில்லை.இந்த காதலின் பிரதிபலிப்பினை உணர்ந்து கொண்டது கடந்த சில நாட்களுக்கு முன் எமது தேசியப் பாடசாலையின் பல் பரிசோதனைப் பிரிவின் (னுநவெயட) ஜன்னல் கண்ணாடிகள். இதே போல இன்னும் ஏராளம் இருக்கிறது கூறப்போனால் வார்த்தைகள் அநாகரிகமாகவே வர வேண்டி வரும். இவ் விடத்தில் அனைத்து மாணவர்களையும் குற்றம் சுமத்தவில்லை. அப்படி சுமத்தப்படுமானால் நான் நிச்சயம் புத்தியற்றவனே.

மேலும் இந்த நவ நாகரீக உலகின் வியத்தகு கண்டுபிடிப்புத் தான் ஸ்மாட் கைத் தொலைபேசிகள். யோசிக்கக் கூடும்  ஸ்மாட் கைத் தொலைபேசிகளுக்கும் அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கும் என்ன தொடர்பு என்று? நிச்சயமாக உண்டு என்றால் தவரில்லை என்பேன். ஆம் பேரூந்துகளிலும் அலுவலகங்களிலும் வங்கிகளிலும் மதஸ்தலங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் Pடநயளந ளுறவைஉh ழுகக லழரச அழடிடைந phழநெ என்ற வாசகம் நவ நாகரீகத்தின் வளர்ச்சியினால் இன்று எமது கல்விக் கூடத்தின் வளாகத்திலும் காட்சிப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு மாறிவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைதான். பாடசாலை வலாகத்தில் அதிலும் பாடசாலை நேரத்திலே மாணவர்கள் தங்களின் பெற்றோர்களால் வாங்கி அன்பளிப்புச் செய்யப்பட்ட பல்லாயிரம் ரூபா பெறுமதியான ஸ்மாட் கைத் தொலைபேசிகளோடு பவணி வருவது கண்கொள்ளாக் காட்சி. இக் கூற்றினை உண்மையென ஒப்புவித்தது எமது தேசியப் பாடசாலையின் அதிபரின் குரல் இதுவரை நான்கு ஸ்மாட் கைத் தொலைபேசிகள் மாணவர்களிடம் இருந்து பரி முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஏற்றுக் கொண்டது அக் குரல். மேலும் 2015.03.15ம் திகதி சமூக வலைத்தளமான  முகப் புத்தகத்திலே (குயஉந டீழழம) நான் கண்ட புகைப்படம் என்னை சிந்திக்க வைத்தது எமது அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அதுவும் பாடசாலை நேரத்தில் கைத் தொலைபேசிகள் பாவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளதா? இல்லை அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கிடையில் பழிவாங்கள் நிகழ்வுகள் அரங்கேறுகின்றதா என்று. நான் கண்ட புகைப்படம் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் க.பொ.த சாதாரன தரத்தில் கல்வி பயிலும் மாணவனாலேயே முகப் புத்தகத்தில் (குயஉந டீழழம) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இப் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்த மாணவனும் மற்றுமொரு மாணவனும் முலந்தாலிடப்பட்டு பிரபலமான ஆசிரியர் ஒருவர் அம் மாணவர்களுக்கு பிரம்பினால் தண்டிப்பதைப் போன்று காணப்படுகின்றது. ஒன்றல்ல அதே போன்று மூன்று புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப் புகைப்படங்கள் பாடசாலை நேரத்திலே யாரால் பிடிக்கப்பட்டது மாணவர்களாலா? இல்லை அந்த புகைப்படத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பழிவாங்கும் எண்ணத்தோடு மற்றைய ஆசிரியராலா? என்ற கேள்வியே முதலில் எழுகிறது. இக்கேள்விக்கான பதிலினை மட்டுமல்ல அந்த ஜன்னல் கண்ணாடிகளுக்குமான பதிலினையும் அளிக்க வேண்டிய அனைத்துப் பொறுப்பினையும் பாடசாலை அதிபர் உட்பட நிறுவாகமும் ஒழுக்கக் குழுவுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக இப் புகைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வாரான நடவடிக்கையினை மேற்கொள்ளப் போகின்றது எமது பாடசாலை நிறுவாகமும் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்கும் ஒழுக்கக் குழுவும்.

இவ்வாராகவே இந்த நவ நாகரீக உலகின் மோகத்தில் புதையுண்டு வெளியேற முடியாத நிலையில் காணப்படுகின்றது எமது தேசியப் பாடசாலையும் எம் உடன் பிறப்புக்களும். நிச்சயம் இவ்வனைத்தும் மாற்றப்பட வேண்டும். இந்த மாற்றத்திற்குத் துணை நிற்கப் போவது யார்??? பெற்றோர்களா? பாடசாலை அதிபர் நிறுவாகம் உட்பட ஒழுக்கக்குழுவா? இல்லை இன்றைய நவ நாகரீக உலகில் முத்திரை பதித்துக் கொண்டு மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் எம் உடன் பிறந்த மாணவ மாணவிகளா????????

இவை அனைத்திற்கும் முடிவு எட்டப்படும் வரை ஓயப்போவதில்லை எனது பேனையும்………….
   
ஆக்கம்:-
ஏ.பி. மொஹமட்.
கல்பிட்டி

Post a Comment

0 Comments