Subscribe Us

header ads

புனித தலங்களான மக்காவையும் மதினாவையும் பாது காப்பதே எனது முக்கிய பணி எனது நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்றும் எனது அரண்மனை வாசல் திறந்தே இருக்கும் சவுதி மன்னர் சல்மான் உருக்கம்!



சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் மன்னர் தனது ரியாத் அரண்மனையில் நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் முக்கிய கபீலாக்களின் தலைவர்களையும் சந்தித்தார்

அந்த சந்திப்பின் போது அவர் நிகழ்த்திய உரை ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதர்கு உரிய வரைவிலக்கணமாக அமைந்தது


அந்த உரையில் இடம் பெற்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விசயங்களை மட்டும் உங்களுக்கு தருகிறேன்

சவுதி அரேபிய ஒரு இஸ்லாமிய நாடு உலக முஸ்லிம்கள் அனைவர்களும் புனிதமாக கருதும் மக்காவையும் மதினாவையும் தனக்குள் சுமந்திருக்கும் நாடு

ஆகவே நமது முக்கிய பணிகளில் ஒன்று இந்த புனித தலங்களை பாதுகாப்பது

இந்த புனித தலங்களின் புனிதங்கள்குலையாமல் நாம் பாது காக்க வேண்டும் என்றால் நமது எல்லைகள் பாது காப்பாக இருந்தாக வேண்டும்

நமது பிள்ளைகளும் சகோதரர்களும் நமது எல்லைகளை பாது காக்கும் பணியை செம்மையாக செய்து வருகின்றனர்

அவர்களை முதலில் நாம் வாழ்த்துவோம் அவர்களுக்காக பிரார்த்திப்போம்

இந்த நாட்டின் மன்னராக உள்ள நான் உங்கள் அனைவர்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பங்கெடுக்க விரும்புகிறேன்  
இந்த அரசு சிறப்பாக இயங்க உங்களிடம் சிறந்த ஆலோசனைகள் இருந்தால் அதை நாங்கள் பணிவுடன் பெற்று கொள்வோம்

உங்களில் எவருக்கும் என்ன தேவைகள் இருந்தாலும் எந்த நேரத்திலும் எம்மை தொடர்ப்பு கொள்ளலாம் உங்களுக்காக எனது அரண்மனை வாசல்களும் தொலை பேசிகளும் கைபேசி களும் எப்போதும் திறந்தே இருக்கும்  இவ்வாறு சல்மானின் உரை அமைந்தது.


Thanks : Unmai thamizhan.

Post a Comment

0 Comments