நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அன்னபட்சி திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்னப்பட்சி சின்னத்தில் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில்ää ரவி கருணாநாயக்க யோசனை முன்வைத்திருந்தார்.
எனினும் இந்த யோசனைத் திட்டத்திற்கு கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான அமைப்பாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுவான சின்னமொன்றில் போட்டியிடுவது கட்சியை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு நிகரானது என தெரிவித்துள்ளனர்.
பொதுவான சின்னமொன்றில் போட்டியிட்டால் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை போட்டியிடச் செய்வதில் சிக்கல் நிலைமைகள் உருவாகக் கூடுமென குறிப்பிட்டுள்ளனர்.


0 Comments