Subscribe Us

தொடரும் இனப்படுகொலை: வெள்ளையரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கறுப்பினத்தவர்: வீடியோ காட்சி வெளியானது


அமெரிக்காவில் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை செய்யப்படுவது வருவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வீடியோ காட்டிசியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கரோலினாவில் உள்ள வடக்கு சார்லஸ்டன் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய வோல்டர் ஸ்கோட்டை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியான 33 வயதுடைய மைக்கல் ஸ்லேகர் தடுத்து நிறுத்தினார். 
இதன்போது குறித்த நபர் தப்பியோட முற்பட்ட போது அவர் சுட்டு கொலை செய்துள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே வோல்டர் ஸ்கோட் பலியானார். 
முன்னாள் கடற்படை காவலரான வோல்டர் தன்னை தாக்க முனைந்ததால் தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாக மைக்கல் உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், சம்பவ இடத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பார்த்தபோது, தப்பி ஓடிய வோல்டரை, முதுகில் 5 முறை மைக்கல் சுடுவது தெளிவாக தெரியவந்துள்ளது.
இருவருக்குமிடையே எந்த வித உரையாடலும் இடம்பெறவில்லை என்பதும் வீடியோ காட்சியிலிருந்து தெரியவந்தது. 

வோல்டர் தப்பியோடும் போது, 8 முறை மைக்கல் துப்பாக்கியால் சுடுவதும், அதில் 3 குண்டுகள் குறி தவறி போவதும், எஞ்சிய 5 குண்டுகள் வோல்டரின் உடலை துளைப்பதும்  வீடியோ காட்சிகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை வீடியோ பதிவுகள் மூலம் தெரிந்து கொண்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரியை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments