கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வரட்சியை நிவர்த்தி செய்யும் வகையில், ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வீட்டுப்பாவனையாளர்களுக்கு நீர் பங்கீட்டு கொடுக்கும் முறைமையை தாய்வான் தொடங்கியுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதி நகரங்களில், வாரத்துக்கு இருமுறை நீர் விநியோகம் சுழற்சி முறையில் முற்றாக நிறுத்தப்படுகிறது.
இப்பவருவ காலத்தில் தாய்வானுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த மழைவீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும். கடந்த 1947ஆம் ஆண்டுக்கு பின் தற்போதே மிகக்குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலகில் மிகக்குறைந்த விலையில் தண்ணீர் கிடைப்பதால் தாராளமாக நீர் வீணாக்கபடும் தாய்வானுக்கு இவ்வரட்சி ஒரு விழிப்பு அழைப்பாகும்.
இங்கு நீர் விநியோகம் இடம்பெறும் குழாய்கள், பத்தாண்டு பழமையானவை என்பதால் இவற்றின் மூலம் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான தொன் நீர் கசிந்து வீணாகின்றது.
தாய்வானில் உள்ள இராசயன, இலத்திரனியல் நிறுவனங்கள் மீது கடந்த மாதம் நீர் கட்டுப்பாடு விதிக்கபட்டது.
எனினும், தமது நீர் சேகரிப்பு நிலையங்களில் சேமிக்கப்பட்ட நீரின் மூலமும் தயாரிப்பு நேரங்களை மாற்றுவதன் மூலமும் தமது உற்பத்திகள் பாதிக்கபடாவண்ணம் நிறுவனங்கள் இயங்குகின்றன.
வரட்சியால், தலைநகர் தாய்பேய் இன்னும் பாதிக்கப்படவில்லை. எனினும் அதற்கருகிலுள்ள நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


0 Comments