Subscribe Us

header ads

நிட்டம்புவ பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது.


நிட்டம்புவை, பசியாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் முதுகெலும்பில் ஏற்பட்ட முறிவே அவரது மரணத்திற்கு காரணமென பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட இளைஞனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இளைஞரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லாது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டுசென்றதாகவும், சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதித்தே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


ஆயினும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

Post a Comment

0 Comments