Subscribe Us

header ads

வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பபாடு  செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (2015-04-18)வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வீடமைப்பு,சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு இந்த கௌரவப்பட்டங்களை வழங்கி வைத்தனர்.


அமைப்பின் தலைவர் சாமஸ்ரீ தேசமான்ய எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,பரந்தன் இராசாயன கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று பணிப்;பாளர் ஷாஹிப் மொஹிதீன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,வவுனியா நகர சபை முன்னாள் உறுப்பினர் அப்துல் பாரி,முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான்  உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.











Post a Comment

0 Comments