அரியானா மாநிலத்தின் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையான ரிஷு மிட்டல், தனது கல்விக்கட்டணத்தை செலுத்துவதற்காக வீட்டு வேலை செய்து வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாநில குத்துச்சண்டை வீராங்கனையான ரிஷு, அரியானாவில் உள்ள கைத்தால் பகுதியை சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். கடந்த வருடம் குவாலியரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் அரியானா சார்பில் ரிஷு கலந்துகொண்டுள்ளார்.
தற்போது 10 ஆம் வகுப்பு படித்துவரும் ரிஷு, தனது சகோதரருடன் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார். அவரது சகோதரரும் அங்குள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது கல்வி கட்டணத்திற்கு தேவையான பணம் இல்லாததால் வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வருகிறார். கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி தரும் அரசுகள், இவரை போன்ற வீராங்கனைகளுக்கு லட்சக்கணக்கில் பணம் தருவதால் எந்த வகையில் குறைந்து போவார்கள்.
0 Comments