Subscribe Us

header ads

பொது இடமொன்றில் மைத்திரி, மஹிந்த சந்திக்கிறார்கள்

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையேயான சந்திப்பொன்று பொது இடமொன்றில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தொடரில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது, அவதானம் செலுத்தப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இன்று இரவு கூடவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலுக்காக முன்னாள் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டீ.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெற்றி தோல்விகளை வாழ்கை முழுவதும் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கம்பஹா - ஹெனகம பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments