இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் கேப்டன் தோனி தனது மகளை வயிற்றில் கட்டி கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்திருந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
கேப்டன் தோனி கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியான சாக்ஷியை மணந்தார். கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6-ம்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜீவா என்று பெயரிடப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தோனி தனது மகளை கூட பார்க்காமல் இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் சுரேஷ் ரெய்னாவின் திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி, இன்று தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்தார்.
தனது குழந்தையை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றார். அங்கிருந்தவர்கள் அனைவரும் தோனியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.


0 Comments