Subscribe Us

header ads

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள், இன்றுமுதல் ஆரம்பம்

 
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறையில் சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு பயண முடிவிடங்களில் இருந்து கொழும்பிற்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்தார்.
இதேவேளை, விடுமுறையின் நிமித்தம் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ள மக்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர்  மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments