வவுனியா சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் 1கோடி 60 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி பாடசாலை கட்டிடம்,சவூதி அரேபியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிறுவனம் என்பனவற்றின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான பள்ளிவாசல் என்பன இன்று திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,சவூதி நாட்டு பிரதி நிதிகள்,மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பலரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
படங்கள் -இர்ஷாத் றஹ்மத்துல்லா -
0 Comments