அமெரிக்காவின் வடக்கு கலிபோனியாவின் பல்கலைக்கழகமொன்றில் 3 முஸ்லிம் மாணவர்களைக் கொலை செய்த சுத்திரதாரிக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பரிசோதனையின் போது கொலையாளியின் ஆடையில் கொலை செய்யப்பட்டவர் ஒருவரின் இரத்தப்படிவு உறுதியான ஆதாரமாக உள்ளது நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி ஸ்டீபன் ஹிக்ஸ் விசாரனைகளின் போது எந்த வித உணர்வு மாற்றங்களையும் காட்டவில்லை என்றும் எப்போதும் அவர் கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையிலேயே விசாரனைகள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மாணவர்களான 23 வயதுடைய சாதி பரகத் மற்றும் 21 வயதான யுஸூர் முஹம்மத் மற்றும் 19 வயதான ரஸான் முஹம்மத் ஆகிய 3 மாணவர்களை கொலை செய்ததற்காக ஹிக்ஸ் விசாரனை செய்யப்பட்டு வருகிறார்.


0 Comments