நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் தான் எதனையும் பேசவில்லை என பிரதி நிதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
தான் அப்படி பேசியிருந்தால், அது குறித்து விசாரணை நடத்துமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தனது தனிப்பட்ட வாழ்க்கையை அவமதிக்கும் வகையில் பேசியதாக மாலினி பொன்சேகா, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
எனினும் தான் அவ்வாறான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் சுஜீவ சேனசிங்க மறுத்துள்ளார்.


0 Comments