Subscribe Us

header ads

வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்திய பிரதமர் ரணில்: செலவுகளை ஏற்ற இந்தியாவைச் சேர்ந்த நலன் விரும்பி


பிரதமர் ரணில் விக்ரமசிங்க குருவாயூர் கிருஸ்ணர் ஆலயத்தில் காணிக்கையாக வழங்கிய சந்தனக்கட்டைகளுக்கு இந்தியாவிலுள்ள நலன் விரும்பியொருவர் பணம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் நேற்றைய தினம் கேரளாவின் குருவாயூர் கிருஸ்ணர் ஆலயத்தில் 77 கிலோ கிராம் எடையுடைய சந்தனக் கட்டைகளை காணிக்கையாக வழங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
இந்த சந்தனக் கட்டைகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் உடல் எடைக்கு பெறுமதியான அளவில் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
இதற்காக எட்டு இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றால் இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டமையினாலேயே தான் இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான செலவுகளை இந்தியாவைச் சேர்ந்த தமது நலன் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments